சுடச்சுட

  

  உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் பயன்படுத்தி வந்த அரசு மாளிகையைக் காலி செய்யுமாறு உத்தரவிடக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
  அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்தபோது, தலைமைச் செயலகத்தில் அவருக்கு அலுவலகம் இருந்த நிலையிலும், மற்றோர் அரசு மாளிகையையும் அவர் அலுவலமாகப் பயன்படுத்தி வந்தார். இந்தச் சூழலில், தலைமைச் செயலகத்தில் அலுவலகம் இருக்கும்போது ஒரு முதல்வரால் மற்றோர் அரசு மாளிகையை அலுவலகமாகப் பயன்படுத்த முடியாது; எனவே அந்த மாளிகையை அகிலேஷ் யாதவ் காலி செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரி, 'லோக் பிரஹாரி' என்ற தொண்டு நிறுவனம் அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
  எனினும், அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதையடுத்து, அலாகாபாத் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, லோக் பிரஹாரி அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான அமர்வு அந்த மனுவை திங்கள்கிழமை பரிசீலித்தது. அகிலேஷ் தேர்தலில் தோல்வியடைந்து, முதல்வர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டதால், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள மாளிகைகளிலிருந்து அவர் ஏற்கெனவே காலி செய்திருக்க வேண்டும்; எனவே இந்த மனு மீதான விசாரணை தேவையற்றது எனக் கூறி, நீதிபதிகள் அதனை தள்ளுபடி செய்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai