சுடச்சுட

  

  இந்தியக் கடற்படைக்கு இஸ்ரேலிடம் இருந்து ஏவுகணைகள் வாங்க மத்திய அரசு ஒப்புதல்

  By DIN  |   Published on : 04th April 2017 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  arun-jetly

  இந்தியக் கடற்படைக்கு இஸ்ரேல் நாட்டிடம் இருந்து பாரக் ரக நவீன ஏவுகணைகளை வாங்கும் திட்டத்துக்கு மத்திய அரசு திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.
  தில்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் பாதுகாப்புத் தளவாட கொள்முதல் கவுன்சில் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், ரூ.860 கோடி மதிப்பில் பாதுகாப்புத் தளவாடங்களை கொள்முதல் செய்யும் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  இந்தத் திட்டங்களில், இஸ்ரேல் நாட்டிடம் இருந்து ரூ.500 கோடி மதிப்பில் தரையில் இருந்து பாய்ந்து சென்று தரையில் உள்ள எதிரி இலக்கை தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணையான பாரக் ஏவுகணையை வாங்கும் திட்டமும் ஒன்றாகும். இந்திய கடற்படையில் உள்ள அனைத்துப் போர்க் கப்பல்களிலும் இந்த ஏவுகணையை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
  பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேலுக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். அதற்கு முன்னதாக, அந்நாட்டின் ரபேல் அட்வான்ஸ் டிபென்ஸ் சிஸ்டெம்ஸ் நிறுவனத்திடம் இருந்து பாரக் ஏவுகணைகளை வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  இக்கூட்டத்தில், பாதுகாப்புத் தளவாடங்களை கொள்முதல் செய்யும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும்படி பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி உத்தரவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  இதேபோல், கடற்பகுதியில் எதிரிகளால் வீசப்படும் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு கடலுக்கு அடியில் செயல்படும் ரோபாவை வாங்கும் திட்டம், கடலுக்கடியில் தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றத்தை கண்டுபிடிக்கும் கருவியை அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் திட்டம் ஆகியவற்றுக்கும் பாதுகாப்புத் தளவாட கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்திருக்கிறது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai