சுடச்சுட

  

  இலவச சமையல் எரிவாயு (எல்பிஜி) இணைப்புத் திட்டத்தின் கீழ் ஓராண்டுக்குள் 2 கோடிக்கும் அதிமானோர் பயனடைந்துள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
  இதுதொடர்பாக, அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் திங்கள்கிழமை அடுத்தடுத்து வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:
  இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம் மூலம், ஓராண்டுக்குள் 2 கோடிக்கும் அதிகமானோர் பயனடைந்திருப்பது மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிக்கிறது.
  ஏழைப் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுதத வேண்டும் என்ற உறுதியோடு இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.
  இத்திட்டத்தால் பயனடைந்த அனைவருக்கும், இத்திட்டம் வெற்றிபெற அயராது பாடுபடும் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மோடி தனது சுட்டுரைப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
  நாடு முழுவதும் 5 கோடி ஏழைகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி, உத்தரப் பிரதேசத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 1-ஆம் தேதி தொடக்கி வைத்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai