சுடச்சுட

  

  'உடல்நலனைப் பாதிக்கும் பொருள்களின் விளம்பரங்களை ரயில்வே அனுமதிக்க வேண்டாம்'

  By DIN  |   Published on : 04th April 2017 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உடல்நலனைப் பாதிக்கும் பொருள்களின் விளம்பரங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என்று ரயில்வே துறைக்கு சுகாதாரத் துறை அமைச்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
  இதுதொடர்பாக ரயில்வே வாரியத் தலைவர் ஏ.கே. மித்தலுக்கு சுகாதாரத் துறைச் செயலர் சி.கே. மிஸ்ரா திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: ரயில்வே வருவாயை அதிகரிப்பதற்காக ரயில்களிலும், ரயில்வே இருப்புப் பாதைகளுக்கு அருகே உள்ள பகுதிகளிலும் விளம்பரங்கள் செய்வதற்கு அனுமதி வழங்கி புதிய கொள்கை முடிவு வகுக்கப்பட்டுள்ளது.
  இவ்வாறு மேற்கொள்ளப்படும் விளம்பரங்கள், மக்களை தவறாக வழிநடத்துவதாக இருக்கக் கூடாது என்பதில் ரயில்வே துறை கவனம் செலுத்த வேண்டும்.
  உதாரணமாக, மக்களின் உடல்நலனைப் பாதிக்கும் பொருள்களான மதுபானங்கள், புகையிலைப் பொருள்கள், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகள், குளிர்பானங்கள் உள்ளிடவற்றுக்கு விளம்பரங்கள் செய்யப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டியது ரயில்வே துறையின் கடமையாகும். ஏனெனில், இதுபோன்ற பொருள்களுக்கு தடைவிதிக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. அப்படியிருக்கையில், அரசுத் துறையான ரயில்வே மூலமாகவே இந்தப் பொருள்களுக்கு விளம்பரங்கள் அளிக்கப்பட்டால் அது முற்றிலும் முரணாக அமைந்துவிடும்.
  எனவே, இந்த விஷயத்தில் ரயில்வே துறை கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai