சுடச்சுட

  

  சேஷாசலம் வனப்பகுதியில் சோதனை: தமிழகத் தொழிலாளர்கள் 2 பேர் கைது

  By DIN  |   Published on : 04th April 2017 02:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  arest

  ரோந்துப் பணியில் ஈடுபட்ட செம்மரக் கடத்தல் தடுப்பு சிறப்புப் பிரிவு ஐஜி பி.காந்தராவ். (உள்படம்) தேடுதல் வேட்டையின்போது, பிடிபட்டவர்கள்.

  ஆந்திர மாநிலம், சேஷாசல வனப்பகுதியில் செம்மரக்கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸார், மோப்ப நாய்களுடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மளிகைப் பொருள்களுடன் வனத்தில் பதுங்கியிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 2 தொழிலாளர்களை போலீஸார் கைது செய்தனர்.
  சேஷாசல வனத்தில் செம்மரக்கடத்தல் தடுப்பு சிறப்புப் பிரிவு போலீஸார் கடந்த சில நாள்களாக ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள், ஞாயிற்றுக்கிழமை மாலை புலிபோனுபாவி வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மரம் வெட்ட பயன்படும் மோட்டார் ரம்பம் புகைப்படம் கொண்ட ஒரு அட்டைப் பெட்டியை கண்டறிந்தனர். மேலும், எடை போடப் பயன்படும் ஸ்பிரிங் பேலன்ஸ் கருவியும் கிடைத்தது.
  இதனால், கடத்தல்காரர்கள் நவீன தொழில்நுட்பம் கொண்ட கருவிகளை பயன்படுத்தி, செம்மரங்களை வெட்டி வருவதாக போலீஸார் சந்தேகித்தனர். இதைத்தொடர்ந்து, பயிற்சி பெற்ற நாய்களான 'கங்கா' , 'ஹண்டர்' ஆகியவற்றுடன் வனத்துக்குள் போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
  இதில், திருப்பதியை அடுத்துள்ள கிராண்ட் வேல்ட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு, தமிழகத்தைச் சேர்ந்த 2 தொழிலாளிகளை போலீஸார் கைது செய்தனர். மேலும், மோப்ப நாய்களை கொண்டு சோதனை நடத்தியதில், பிடிபட்டவர்கள் அங்கு மறைத்து வைத்திருந்த அரிசி, பருப்பு, எண்ணெய், மிளகாய் உள்ளிட்ட மளிகை பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
  விசாரணையில், பிடிபட்டவர்கள், திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையைச் சேர்ந்த பிரகாஷ் (24), செல்வமணி (25) என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, இருவரையும் திருப்பதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் வைத்தனர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai