சுடச்சுட

  

  சொத்துக் குவிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகத்தின் வழக்குச் செலவு ரூ.2.78 கோடி!

  By DIN  |   Published on : 04th April 2017 02:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்பட நால்வர் மீது தொடுக்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்காக உச்ச நீதிமன்றத்தில் மட்டும் கர்நாடக அரசு ரூ.2.78 கோடி செலவழித்துள்ளதாக தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
  சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட நால்வரும் குற்றமற்றவர்கள் என தீர்ப்பளிக்கப்பட்டது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனுதாக்கல் செய்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் வாதிட்ட வழக்குரைஞர்களின் பெயர் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் குறித்து தகவலறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சமூக ஆர்வலர் டி.நரசிம்மமூர்த்தி தகவல் கோரியிருந்தார்.
  இதற்கு விளக்கமளித்த மாநில அரசு தலைமை வழக்குரைஞர் அலுவலகத்தின் நிர்வாக அதிகாரி குருசித்தையா, உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞர்கள் துஷ்யந்த்தாவே, பி.வி.ஆச்சார்யா, வழக்குரைஞர்கள் ஜோசப் அரிஸ்டாட்டல், சந்தேஷ்செளட்டா, அரசு தலைமை வழக்குரைஞர் மதுசூதன்நாயக் ஆகியோருக்கு ஊதியமாக ரூ.2.78,70,888 வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai