சுடச்சுட

  

  ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு மத்திய அரசு துணைநிற்கும்: பிரதமர் மோடி

  Published on : 04th April 2017 12:15 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi

  புதுதில்லி: ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சிக்காக அந்த மாநில மக்களுக்கு மத்திய அரசு முழுமையாக உறுதுணை புரியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

  இது தொடர்பாக, சுட்டுரை சமூக வலைதளப் பக்கத்தில் தன்னைப் பின்தொடரும் ஆர்வலர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மோடி பதிலளித்து, சில பதிவுகளை வெளியிட்டார்.

  அதன்படி, ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பதற்றமான சூழலின்போது ஆதரவு அளித்த பிரதமரைப் பாராட்டுவதாக அந்த மாநில முதல்வர் மெஹபூபா தெரிவித்த கருத்து குறித்து ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மோடி அளித்த பதிலில் "ஜம்மு-காஷ்மீரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக அந்த மாநில மக்களுக்கு மத்திய அரசு முழுமையாகத் துணைநிற்கிறது' என்று தெரிவித்தார்.

  அதேபோல் மற்றொருவர் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதிலில், "ஜம்மு-காஷ்மீர் மிகவும் அற்புதமானது. நீங்கள் அந்த மாநிலத்துக்கு வருகை புரிந்து அதன் அழகை அனுபவிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டார்.

  முன்னதாக, காஷ்மீரையும் ஜம்முவையில் இணைக்கும் 9 கி.மீ. நீள சுரங்கச் சாலையை மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், "மாநிலத்தின் வேகமான வளர்ச்சியை உறுதிப்படுத்த எனது அரசு உறுதிபூண்டுள்ளது' என்றார்.

  மேலும், "காஷ்மீரியம், ஜனநாயகம், மனிதநேயம்' ஆகிய வழிகளில் காஷ்மீர் மக்கள் முன்னேற பெற வேண்டும் என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியது நினைவுக்கு வருகிறது என்றும் மோடி சுட்டிக்காட்டினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai