சுடச்சுட

  

  நெடுஞ்சாலையோர மதுபானக் கடைகளுக்கு பூட்டு: அறிய வேண்டிய 7 விஷயங்கள்

  By DIN  |   Published on : 07th April 2017 10:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tasmac


  புது தில்லி: தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த மதுபானக் கடைகளை மூடுமாறு உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவினால் என்ன நடந்தது என்று அறிய ண்டாமா?

  கடந்த சனிக்கிழமை முதல், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக ஆயிரக்கணக்கான மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

  மதுபானக் கடைகள் மூடப்பட்டதால் உடனடியாக, நேரடியாக ஏற்பட்ட பாதிப்பு மாநில அரசுகளுக்கு வருவாய் இழப்பு. ஏராளமான மாநிலங்களில் ரூ.720 கோடி முதல் ரூ.15 ஆயிரம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்துக்கு ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் இழப்பு. பஞ்சாப் மாநிலம் ரூ.15 ஆயிரம் கோடி வருவாய் இழப்புடன் முதல் இடத்தில் உள்ளது.

  மதுபான விற்பனை சரிவு, வருவாய் இழப்பு எல்லாம் மாநில அரசுகளின் கவலை என்றால், வேலை இழப்பு என்ற மாபெரும் சிக்கல் மக்களை நேரடியாக பாதிக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் இந்தியாவில் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படும் என்று நிதி ஆயோக் தலைவர் அமிதாப் காந்த் கூறினார்.

   

  முக்கியமாக தமிழகம். மதுபான விற்பனையால் கிடைக்கும் வருவாயும் இழந்து, டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்த 12 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். இவர்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
   

  மதுபானக் கடைகளுடன் சேர்ந்து இயங்கி வந்த பார்களும் தற்போது மூடப்பட்டிருப்பதால், அதில் வேலை செய்து வந்தவர்களும், அதன் வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கியச் சுற்றுலாத் தலங்களில் இது பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

  சாலைப் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தான் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் கேரளா அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்கு அப்பால், எளிதில்  அணுக முடியாத இடத்தில் கடைகளை வைக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது. ஆனால், குடியிருப்புப் பகுதிகளுக்குள் கடைகளை அமைக்க பொது மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் கடைகளை மாற்றுவது பெரும் சவாலான பணியாகவே உள்ளது.
   

  உச்ச நீதிமன்ற உத்தரவால் பாதிக்கப்படாத மாநிலமும் ஒன்று உள்ளது. அதுதான் மத்தியப் பிரதேசம். உச்ச நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்ட போதே, நெடுஞ்சாலைகளில் இருந்த பெரும்பாலான கடைகள் வேறு இடங்களில் மாற்றப்பட்டுவிட்டது.

  பெரும்பலான மதுபானக் கடைகள் மூடப்பட்டதால், வருவாய் இழப்பை ஈடுகட்டவும், மதுப்பிரியர்களின் தேவையை பூர்த்தி செய்யவும் கேரளாவில் மதுபானக் கடைகள் இயங்கும் நேரம் 12 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai