சுடச்சுட

  

  பசுவை பாதுகாக்கும் பாஜக அரசு... பசுவை வளர்க்கும் விவசாயிகளைக் காக்கத் தவறியது ஏன்?

  By DIN  |   Published on : 04th April 2017 11:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Sanjay-Raut

  மும்பை: பாஜக ஆளும் மாநிலங்களில் பசுவதைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் அதேவேளையில், பசுவை வளர்க்கும் விவசாயிகளைப் பாதுகாக்க எந்தவிதமான நடவடிக்கையும் ஏன் எடுப்பதில்லை? என்று சிவசேனை எம்.பி. சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார்.

  பசுக்களைக் கொன்றால் ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்தை குஜராத் அரசு அண்மையில் நிறைவேற்றியது. இது ஒருபுறமிருக்க, பசுக்களைக் கொல்பவர்களைத் தூக்கிலிடுவோம் என்று சத்தீஸ்கர் மாநில முதல்வர் ரமண் சிங் தெரிவித்திருந்தார்.

  இக்கருத்து பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டது. இந்தச் சூழலில், பசுக்களைக் காப்பதற்கு காட்டப்படும் அக்கறையை பாஜக ஆட்சியாளர்கள் விவசாயிகள் நலனில் காட்டுவதில்லை என்று சிவசேனை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் தில்லியில் கூறியதாவது:

  பசுக்களைப் போலவே விவசாயிகளுக்கும் இந்த மண்ணில் வாழ்வதற்கு அனைத்து உரிமைகளும் உள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்றால், அவற்றுக்குத் தீர்வு காண வேண்டிய கடமை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்குத்தான் இருக்கிறது.

  வேளாண் மக்களின் வேதனையைத் தீர்ப்பதற்குத் தேவையான உறுதியான நடவடிக்கையை ஆட்சியாளர்கள் எடுக்க வேண்டும். இல்லையென்றால், விவசாயிகளின் தற்கொலைக்கு சம்பந்தப்பட்ட மாநில அரசே பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.
  பசுக்களைக் காப்பதைப் போலவே விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும். தற்போதைய சூழலில் இது மிகவும் அவசியமான நடவடிக்கையாகும்.

  ஹிந்துத்துவக் கொள்கை கொண்ட ஒரு கட்சி (பாஜக) மத்தியில் ஆட்சியில் இருக்கும்போதிலும், உலகிலேயே அதிக அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா இருப்பது வருத்தமளிக்கிறது.

  கடந்த இரு ஆண்டுகளில் மாட்டிறைச்சி ஏற்றுமதி கணிசமாக உயர்ந்துள்ளது. இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பசுக்களைப் பாதுகாப்பதற்கு சிறப்புச் சட்டங்கள் மாநிலவாரியாக உள்ளன. ஆனால், இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் பொதுவான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai