சுடச்சுட

  

  பிஎஸ்-III வாகனங்கள்: உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் தலையிட தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மறுப்பு

  By DIN  |   Published on : 04th April 2017 01:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் தலையிட்டு, பாரத் ஸ்டேஜ் (பிஎஸ்) III விதிகளின்கீழ் தயாரிக்கப்பட்ட 10 டீசல் வாகனங்களை பதிவுசெய்ய அனுமதி வேண்டுமென்ற கிழக்கு தில்லி மாநகராட்சியின் கோரிக்கையை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நிராகரித்துவிட்டது.
  பிஎஸ்-III புகை மாசுக் கட்டுப்பாட்டு விதிகளின் கீழ் தயாரிக்கப்பட்ட வாகனங்களை ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு விற்பனை செய்யவும், பதிவு செய்யவும் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கடந்த புதன்கிழமை தடை விதித்தது.
  இந்நிலையில், கிழக்கு தில்லி மாநகராட்சியில் குப்பைகளை அள்ளுவதற்காக 10 டீசல் வாகனங்கள் புதிதாக வாங்கப்பட்டன. இவை பிஎஸ்-III வாகனங்கள் என்பதால், அவற்றை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், மாநகராட்சி சார்பில் இது தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் முறையிடப்பட்டது. அப்போது, மாநகராட்சி 10 குப்பை அள்ளும் வாகனங்களை வாங்கியபோது சந்தையில் பிஎஸ்-III வாகனங்கள் மட்டும்தான் கிடைத்தது என்றும், பிஎஸ்-I  வாகனங்கள் கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவால் அந்த புதிய வாகனங்களை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வாகனங்களைப் பதிவு செய்யும் வகையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
  ஆனால், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவரும், நீதிபதியுமான ஸ்வதந்தர் குமார் இதனை ஏற்க மறுத்துவிட்டார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் பசுமைத் தீர்ப்பாயம் தலையிட முடியாது என்று அவர் கூறிவிட்டார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai