சுடச்சுட

  

  மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்யும் முன் விடியோ வெளியிட்ட பெங்களூர் இளைஞர்

  By DIN  |   Published on : 04th April 2017 05:23 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  arjun_bharathwaj


  மும்பை: மும்பையில் 19வது மாடியில் இருந்து தான் குதித்து தற்கொலை செய்து கொண்டதை, இளைஞர் ஒருவர் நேரடியாக விடியோ எடுத்திருப்பது சமூக வளைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

  மும்பையின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பாந்த்ராவில் இருக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டலின் 19வது மாடியில் இருந்து குதித்த 23 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

  முதற்கட்ட விசாரணையில், பலியான இளைஞரின் பெயர் அர்ஜூன் பரத்வாஜ். இவர் பெங்களூருவைச் சேர்ந்தவர். மும்பையில் உள்ள கல்லூரி ஒன்றில் மேலாண்மைக் கல்வி பயின்று வந்த இவர் மும்பையில் 2013ம் ஆண்டில் இருந்து வசித்து வருகிறார் என்பது தெரிய வந்துள்ளது.

  இவர், கடந்த திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில், தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து, அதில் இருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

  அப்போது, தன் கையில் இருந்த செல்போன் மூலமாக, தனது தற்கொலையை விடியோ எடுத்து அதனை பேஸ்புக்கில் நேரடியாக பதிவும் செய்துள்ளார்.

  தற்கொலை செய்வதற்கு முன்பு, அவர் எழுதிய கடிதத்தில் 'மன அழுத்தம் மற்றும் போதைப் பழக்கமே தனது தற்கொலைக்குக் காரணம் என்றும், தனது நண்பர்களுக்கு நன்றியையும், பெற்றோரிடம் மன்னிப்பும் கேட்டுக் கொள்வதாகக்' கூறியிருந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai