சுடச்சுட

  

  முல்லைப் பெரியாறு வாகன நிறுத்துமிடம் கட்டுவதற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

  By DIN  |   Published on : 04th April 2017 02:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முல்லை பெரியாறு அணை நீர்ப்பிடிப்புப் பகுதி அருகே வாகன நிறுத்துமிடம் அமைக்கும் கேரள அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரும் தமிழக அரசின் மனு மீதான விசாரணையை இரு வாரங்களுக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை ஒத்திவைத்தது.
  இது தொடர்பாக 2014-ஆம் ஆண்டில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், பிரஃபுல்லா சி. பந்த் ஆகியோர் அடங்கி அமர்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது.
  அப்போது, தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் உமாபதி ஆஜராகி, 'வழக்கு தொடர்பான கேள்விகளை தயார் செய்ய இரண்டு வார கால அவகாசம் தேவை' என்று கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
  பின்னணி: முல்லை பெரியாறு அணை அருகே உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதியில் படகு சவாரி செய்ய தேக்கடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக குமுளி (தமிழக பகுதி) அருகே உள்ள ஆனவச்சால் பகுதியில் 2 ஏக்கர் பரப்பில் வாகன நிறுத்துமிடம் அமைக்க கேரள வனத்துறை இடம் தேர்வு செய்தது.
  இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதையடுத்து முல்லைப் பெரியாறு அணைப்பகுதியை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளை கேரள அரசு ஆக்கிமிரத்து வருவதாக கூறி கடந்த ஆண்டு ஒரு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்தது.
  இதே விவகாரம் தொடர்புடைய வழக்கில், வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்கான கட்டுமானத்தை மேற்கொள்ள கேரள அரசுக்கு தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. இதை எதிர்த்தும் தமிழக அரசு கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai