சுடச்சுட

  

  ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயப் புழக்கத்துக்கு நாடு முழுவதும் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
  கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக முழுக்க, முழுக்க மின்னணுப் பணப் பரிவர்த்தனை நடைமுறைகளை அமல்படுத்த வேண்டும் என்றும் புழக்கத்தில் உள்ள நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி ஹரித்வாரைச் சேர்ந்த நியாய தர்ம சபை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
  அந்த மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் கூறியதாவது:
  கருப்புப் பணத்தை ஒழிக்க மின்னணுப் பணப் பரிவர்த்தனையை கட்டாயமாக்க வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கருப்புப் பண ஒழிப்பு தொடர்பான பல்வேறு அறிவுப்புகளையும் அரசு வெளியிட்டு வருகிறது.
  ஒருவேளை மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளில் மனுதாரருக்கு திருப்தி இல்லை என்றால், அவரது மாநிலத்தில் உள்ள உயர் நீதிமன்றத்தில் அதுதொடர்பாக மனு தாக்கல் செய்யலாம். அதற்கு முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்றனர். இதைத்தொடர்ந்து அந்தப் பொதுநல மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai