சுடச்சுட

  

  விக்ரமசீலா பல்கலைக்கழக மறுசீரமைப்பு: பிரதமரிடம் பேச பிரணாப் முடிவு

  By DIN  |   Published on : 04th April 2017 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pranap

  தொன்மைவாய்ந்த விக்ரமசீலா பல்கலைக்கழகத்தை மறுசீரமைப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் பேச இருப்பதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
  பிகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள விக்ரமசீலா பல்கலைக்கழகத்தில் பொதுமக்கள் மத்தியில் திங்கள்கிழமை பேசிய அவர் கூறியதாவது: பால வம்சப் பேரரசர்களின் காலத்தில் புகழ்பெற்று விளங்கிய பௌத்த கல்வி நிலையமான விக்ரமசீலா பல்கலைக்கழகம் மீண்டும் முந்தைய பெருமையை அடைய வேண்டும். இங்குள்ள பழைமை வாய்ந்த நினைவுச் சின்னங்களையும், அருங்காட்சியகத்தில் உள்ள சிற்பங்களையும் பார்க்கும்போது, அக்காலத்தில் விக்ரமசீலா பல்கலைக்கழகம் எந்த அளவுக்கு கலாசாரத்தில் சிறந்து விளங்கியுள்ளது என்பதை உணர முடிகிறது. ஒரு காலத்தில் தேசத்தின் முக்கிய கல்வி நிலையமாக இருந்து நமது நாட்டுக்கு இப்பல்கலைக்கழகம் வழிகாட்டியுள்ளது. இங்கு பல ஆய்வுகள் ஊக்குவிக்கப்பட்டுள்ளன.
  இங்கு படித்த மாணவர்கள்தான் பிற்காலத்தில் பல்வேறு நாடுகளுக்குச் சென்று பௌத்த மதத்தையும், இந்தியாவின் கலாசார சிறப்புகளையும் உலகறியச் செய்துள்ளனர். விக்ரமசீலா பல்கலைக்கழகத்தை மறுசீரமைப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் பேச இருக்கிறேன். விக்ரமசீலா வெறும் அருங்காட்சியகமாக மட்டும் இருக்கக் கூடாது; தரம் வாய்ந்த பல்கலைக்கழகமாக மறுநிர்மாணம் செய்யப்பட வேண்டும். நமது நாட்டில் உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது என்றார் அவர்.
  முன்னதாக, கடந்த 2015-ஆம் ஆண்டு விக்ரமசீலா பல்கலைக்கழக மேம்பாட்டுக்காக பிரதமர் மோடி ரூ.500 கோடியை அறிவித்தார். பல்கலைக்கழகம் அமைக்க மாநில அரசு 500 ஏக்கர் நிலத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai