சுடச்சுட

  

  சோமாலிய கடற்பகுதியில் 11 இந்திய மாலுமிகளுடன் சென்று கொண்டிருந்த சிறிய கப்பலை அந்நாட்டில் செயல்படும் கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.
  துபேயில் இருந்து சோமாலியாவின் போஸாúஸா எனப்படும் இடத்துக்கு அந்த மரக் கப்பல் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது. யேமனின் சோகோத்ரா தீவு- சோமாலிய கடற்பகுதிக்கு இடையே அந்தக் கப்பல் சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த கடற்கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் அதை கடத்தினர்.
  சோமாலியாவின் வடக்குப் பகுதியில் தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் எய்ல் என்னுமிடத்துக்கு அந்தக் கப்பலை கடற்கொள்ளையர்கள் ஓட்டிச் சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியக் கப்பல் கடத்தப்பட்டது குறித்து அமெரிக்க கடற்படையின் 5-ஆவது படைப்பிரிவு தளபதி இயன் மெக்கானோக்கே கூறுகையில், 'மாலுமிகளுக்கு கப்பல் கடத்தப்பட்டது குறித்து தெரியும். நிலைமையை உன்னிப்பாக நாங்கள் கவனித்து வருகிறோம்' என்றார்.
  சோமாலிய கடற்பகுதி வழியே செல்லும் கப்பல்களை கடற்கொள்ளையர்கள் கடத்திச் செல்லும் சம்பவங்கள் முன்பு அதிக அளவு நடைபெறும். ஆனால், தற்போது கடற்கொள்ளையர்களுக்கு எதிராக சர்வதேச நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதும், கடத்தல் சம்பவங்கள் குறைந்து விட்டன. எனினும், மேற்கு ஆப்பிரிக்காவின் கினியா வளைகுடா பகுதியில் செல்லும் கப்பல்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன.
  கடந்த மாதம், காமாரோஸ் நாட்டுக்குச் சொந்தமான எண்ணெய் கப்பலான ஏரிஸ் 13-ஐ கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். கடந்த 2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு, மிகப்பெரிய அளவிலான கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றது இதுவே முதல்முறையாகும். எனினும், அந்தக் கப்பலையும், கப்பலில் இருந்த இலங்கையைச் சேர்ந்த மாலுமிகளையும் கடற்கொள்ளையர்கள் நிபந்தனையின்றி விடுவித்து விட்டனர்.
  இதேபோல், மீன்பிடி கப்பல் ஒன்றையும் சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடந்த மாதம் கடத்திச் சென்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai