சுடச்சுட

    

    ஆர்.கே.நகரில் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ1.38 லட்சம் பறிமுதல்

    By DIN  |   Published on : 05th April 2017 09:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை: இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.38 லட்சம் பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    ஆர்.கே.நகரில் வரும் ஏப்ரல்.12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து, அங்கு போட்டியிடும் கட்சிகள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அவ்வப்போது, பணப்பட்டுவாடா செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, அத்தொகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், ஆர்.கே. நகர் தொகுதியின் காசிமேடு மீன் பிடி துறைமுகம் அருகே ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ 1.38 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்ட பணம் குறித்து ஐந்து பேரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai