சுடச்சுட

  

  ஒடிஸா: பாஜகவில் இணைய ஆர்வம் காட்டும் பிஜு ஜனதா தளம், காங்கிரஸ் தலைவர்கள்: மத்திய அமைச்சர் ஜுவல் ஓராம்

  By DIN  |   Published on : 05th April 2017 02:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஒடிஸாவில் பிஜு ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் பாஜகவில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர் என்று மத்திய அமைச்சர் ஜுவல் ஓராம் குறிப்பிட்டார்.
  இது தொடர்பாக அவர் புவனேசுவரத்தில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
  உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் கிடைத்த வெற்றியையடுத்து, பாஜகவில் நல்ல வாய்ப்பு இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.
  எனினும் பாஜகவில் சேர விரும்பும் பிஜு ஜனதாதளத்தின் எம்.பி.க்கள், எம்எல்ஏக்களின் பெயரைக் கூற இயலாது. நாடாளுமன்றத்தின் மத்திய அரங்கு உள்ளிட்ட பல இடங்களில் நாங்கள் சந்தித்துப் பேசி
  வருகிறோம்.
  நடந்து முடிந்த ஊராட்சித் தேர்தலில் கட்சிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியையடுத்து, பாஜகவை மக்கள் ஏற்றுக்கொண்டது நிரூபணமாகியிருக்கிறது.
  மக்களுக்கு எவ்வித அச்சமுமின்றிப் பணியாற்றுவதற்கு மிகச் சிறந்த இடமாக பாஜகவை தற்போது அனைத்து அரசியல் கட்சியினரும் பார்க்கின்றனர். எனவே பொதுச் சேவையாற்ற விரும்பும், அதே நேரத்தில் வாய்ப்புகள் மறுக்கப்படும் அரசியல்வாதிகளுக்கு பாஜக மிகச் சிறந்த கட்சியாகப் புலப்படுகிறது.
  பிஜு ஜனதாதளத்தை பிளவுபடுத்த முயற்சிப்பதாக பாஜக மீது புகார் தெரிவிக்கப்படுகிறது. அக்கட்சியை வெளியில் இருந்து யாரும் உடைக்கத் தேவையில்லை. அது தானாகவே பிளவுபடும். பாஜகவில் இருந்தால் மிகவும் சுதந்திரமாகவும் சுயேச்சையாகவும் பணியாற்றலாம் என அரசியல்வாதிகள் கருதுகின்றனர். பாஜகவுக்கு மக்களின் ஆதரவு நாளுக்குநாள் பெருகி வருகிறது என்றார் ஓராம்.
  பிஜேடி மறுப்பு: ஓராமின் கருத்தை மறுக்கும் வகையில் பிஜு ஜனதா தள செய்தித் தொடர்பாளர் பி.கே.தேவ் கூறுகையில், 'மத்திய அமைச்சரின் கூற்றில் எந்த உண்மையும் இல்லை. பொறுப்பின்றி பேசுகிறார் ஓராம். நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். எந்த காரணமின்றியும் பாஜக தலைவர்கள் இப்படி பிதற்றுவது ஒன்றும் புதிதல்ல. 2014 பொதுத் தேர்தலின்போதும் இதுபோன்ற பொய்யான பிரசாரத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.
  எனினும் பிஜு ஜனதாதளத்தை பிளவுபடுத்த பாஜகவால் இயலவில்லை' என்று குறிப்பிட்டார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai