சுடச்சுட

  

  காங்கிரஸாரை யாராலும் காப்பாற்ற முடியாது: திக்விஜய் சிங் விரக்தி

  By DIN  |   Published on : 05th April 2017 02:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காங்கிரஸ் கட்சியினர் இனியும் தம்மை மாற்றிக் கொள்ளாவிட்டால் அவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
  காங்கிரஸில் நிலவி வரும் உள்கட்சிப் பூசலை சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
  இதுகுறித்து மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரில் செய்தியாளர்களிடம் திக்விஜய் சிங் கூறியதாவது: நாட்டின் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸார் மத்தியில் உள்கட்சிப் பூசல் நிலவி வருவது கவலையளிக்கிறது. தேர்தல் தோல்விகள் குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டிய காலகட்டத்தில், நமக்குள்ளாகவே சண்டையிட்டுக் கொண்டிருப்பது கட்சியை இன்னும் அழிவுப் பாதைக்குதான் கொண்டு செல்லும்.
  காங்கிரஸ் கட்சி மீது சிறிதளவேனும் மரியாதை வைத்திருப்பவர்கள் மக்களிடம் சென்று அவர்களுக்காக உழைக்க வேண்டும். அப்போதுதான், மக்கள் நம்மை அங்கீகரிப்பார்கள். இனியும் காங்கிரஸ் கட்சியினர் தம்மை மாற்றிக் கொள்ளாவிட்டால், அவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது என்றார் அவர்.
  முன்னதாக, கோவாவில் ஆட்சியமைக்க தவறியது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த திக்விஜய் சிங், 'கோவாவில் கதவுகள் திறந்திருந்தும் கூட எங்களால் (காங்கிரஸ்) உள்ளே நுழைய முடியாமல் போய்விட்டது' என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai