சுடச்சுட

  

  குஜராத்தில் முன்கூட்டியே தேர்தல் வரலாம்: வகேலா கருத்து

  By DIN  |   Published on : 05th April 2017 02:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குஜராத்துக்கு வரும் 17-ஆம் தேதி பிரதமர் மோடி வருகைக்கு பின்னர், சட்டப் பேரவையை விரைவில் கலைத்துவிட்டு, மாநில பாஜக அரசு தேர்தலை சந்திக்கக் கூடும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சங்கர் சிங் வகேலா தெரிவித்துள்ளார்.
  இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், 'பிரதமர் மோடியின் குஜராத் வருகைக்குப் பின்னர், சட்டப் பேரவையை கலைத்துவிட்டு, பாஜக அரசு முன்கூட்டியே தேர்தலை சந்திக்கக் கூடும் எனத் தெரிகிறது' என்றார். தேர்தல் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு, குறைந்தபட்சம் 25 நாள் கால அவகாசம் இருந்தாலே போதும் என்று தேர்தல் ஆணையம் கூறியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
  குஜராத் சட்டப் பேரவையின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதம் நிறைவடையவுள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தில் அண்மையில் கிடைத்த பேரவைத் தேர்தல் வெற்றியால் குஜராத்தில் முன்கூட்டியே பேரவைத் தேர்தலை பாஜக சந்திக்கும் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
  ஆனால், அங்கு அண்மையில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, பேரவைத் தேர்தல் உரிய காலமான நவம்பரில் நடைபெறும் என்றே குறிப்பிட்டார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai