சுடச்சுட

  

  சத்தீஸ்கர்: ஐஏஎஸ் அதிகாரியின் ரூ. 36 கோடி சொத்துகள் முடக்கம்

  By DIN  |   Published on : 05th April 2017 02:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சத்தீஸ்கரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியின் ரூ. 36 கோடிமதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
  இதுதொடர்பாக, அந்தத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:
  சத்தீஸ்கர் அரசின் முதன்மைச் செயலராக இருப்பவர் பாபுலால் அகர்வால். இவர், அந்த மாநில சுகாதாரத் துறை செயலராக கடந்த 2010-ஆம் ஆண்டு பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.
  இதையடுத்து அவருக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. மேலும், கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.
  இந்நிலையில் பாபுலால் அகர்வாலின் வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துகளையும், அவரது சகோதரர்களுக்குச் சொந்தமான 'பிரைம் இஸ்பத்' என்ற நிறுவனத்தின் சொத்துகளையும் அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 36 கோடியாகும் என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai