சுடச்சுட

  

  ஜிஎஸ்டிஎன்-னில் பதிவு செய்து கொள்ள வணிகர்களுக்கு காலக்கெடு நீட்டிப்பு

  By DIN  |   Published on : 05th April 2017 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சரக்கு மற்றும் சேவை வரி தாக்கல் செய்வதற்காக, இந்த மாதம் இறுதி வரை வணிகர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என்று வருவாய்த் துறை அறிவித்துள்ளது.
  இந்தியாவில் ஜிஎஸ்டி வரி விதிப்பை தகவல் தொழில்நுட்பம் மூலம் ஒருங்கிணைக்கும் 'ஜிஎஸ்டிஎன்' நிறுவனத்தில், இணையதளம் மூலம் பதிவு செய்துகொள்ள வணிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
  எனினும், தற்போது மதிப்புக்கூட்டு வரி செலுத்துவோரில் 60 சதவீதத்தினர் மட்டுமே ஜிஎஸ்டிஎன்-னில் பதிவு செய்துள்ளதால், அதற்கான காலக்கெடுவை இந்த மாதம் இறுதிவரை வருவாய்த் துறை நீட்டித்துள்ளது.
  இதுகுறித்து வருவாய்த் துறைச் செயலர் ஹஸ்முக் அதியா கூறியதாவது:
  மதிப்புக்கூட்டு வரி (வாட்) செலுத்துவோரில் 74 சதவீதத்தினர் ஜிஎஸ்டிஎன் வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர். எனினும், விற்பனை மற்றும் சேவை வரி செலுத்துவோரில் 28 சதவீதத்தினர் மட்டுமே அந்த வலைதளத்தில் தங்களைப் பதிவு செய்து கொண்டுள்ளனர்.
  எனவே, அந்த வலைதளத்தில் வணிகர்கள் பதிவு செய்து கொள்வதற்கான காலக்கெடு, இந்த மாதம் இறுதி வரை நீட்டிக்கப்படுகிறது.
  ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை வர்த்தகம் புரிந்து, தற்போது 'வாட்' மற்றும் விற்பனை - சேவை வரிகளை செலுத்தி வரும் வணிகர்கள், இனி ஜிஎஸ்டி வரி செலுத்தத் தேவையில்லை என்பதால், அவர்கள் ஜிஎஸ்டிஎன்னில் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai