சுடச்சுட

  

  தடை செய்யப்பட்ட அமைப்புகளின் மாணவர்களுக்கு பள்ளிச் சேர்க்கை கிடையாது: தில்லி அரசு புதிய உத்தரவு

  By DIN  |   Published on : 05th April 2017 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளிச் சேர்க்கை கிடையாது என்று தில்லி அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
  நாட்டில் உள்ள சில பல்கலைக்கழகங்களில் தேசவிரோத மற்றும் பிரிவினைவாத கோஷங்கள் எழுப்பப்பட்டு வரும் சூழலில், தில்லி அரசு இத்தகைய உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.
  இதுகுறித்து தில்லி அரசின் கல்வி இயக்குநரக உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
  தில்லி அரசின் கல்வி இயக்குநரகம் சார்பில் புதிய நடத்தை விதிமுறைகள் அண்மையில் வெளியிடப்பட்டிருக்கின்றன.
  அதன்படி, நாட்டில் தடை செய்யப்பட்ட இயக்கங்களான லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது, பாபர் கல்ஸா, மாவோயிஸ்ட் உள்ளிட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கும் மாணவர்கள், தில்லியில் உள்ள எந்தப் பள்ளிகளிலும் சேர்த்து கொள்ளப்பட மாட்டார்கள்.
  ஒருவேளை, அதுபோன்ற மாணவர்கள் பள்ளிகளில் ஏற்கெனவே சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தால், அவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள்.
  இந்த விதிமுறைகள், ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சேர்க்கைகளில் கடைப்பிடிக்கப்படும் என அந்த அதிகாரி தெரிவித்தார்.
  சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு: இதனிடையே, தில்லி அரசின் இந்த புதிய உத்தரவுக்கு சமூக ஆர்வலர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து 'சோஷியல் ஜூரிஸ்ட்' என்ற சமூக உரிமை அமைப்பின் தலைவர் அசோக் அகர்வால் கூறியதாவது:
  தில்லி அரசின் இந்த உத்தரவு மிகவும் அபத்தமானது. மேலும் இது, மாணவர்களின் கல்வி கற்கும் உரிமையை மறுக்கும் வகையிலும் உள்ளது. பள்ளி மாணவர்களை இதுபோன்ற சமூக விரோத அமைப்புகளுடன் தொடர்புபடுத்துவதே முதலில் தவறு. அப்படியே, சில மாணவர்களுக்கு இதுபோன்ற அமைப்புகளில் தொடர்பு இருந்தால் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி திருத்த வேண்டுமே தவிர, பள்ளிச் சேர்க்கையை மறுப்பதோ, பள்ளிகளிலிருந்து வெளியேற்றுவதோ தவறான முடிவாகும். எனவே, இந்த உத்தரவை தில்லி அரசு திரும்பப் பெற வேண்டும் என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai