சுடச்சுட

  

  தில்லியில் போக்குவரத்து விதிமீறல் இரு மடங்கு உயர்வு: மணிக்கு 714 பேர் பிடிபடுகின்றனர்

  By புதுதில்லி  |   Published on : 05th April 2017 07:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  delhi_traffic

  தில்லியில், போக்குவரத்து விதிகளை மீறியதாக மணிக்கு 714 பேர் பிடிபடுவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இது இருமடங்காக அதிகரித்துள்ளது.

  இதுகுறித்து தில்லி காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
  இந்த ஆண்டு சராசரியாக ஜனவரி 1 முதல் மார்ச் 28-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக நாளொன்றுக்கு சுமார் 17,158 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதாவது, மணிக்கு 714 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

  கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 7,312 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. அதாவது, மணிக்கு 304 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.

  அந்த வகையில், இந்த ஆண்டு அபராதம் விதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.

  பொதுவாக, சிகப்பு விளக்கை மீறிச் செல்வது, அதிவேகமாக செல்வது, தலைக்கவசம் அணியாமல் பயணிப்பது, மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குவது போன்ற காரணங்களுக்காக வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

  விதிமீறலில் ஈடுபடுவோரை கண்காணித்து அபராதம் விதிப்பதன் காரணமாக, விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

  இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் மார்ச் 28-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தலைநகரில் விபத்து காரணமாக 284 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

  கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 412-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

  அதேபோல், விபத்தினால் காயம் அடைந்தோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இந்த ஆண்டில் மார்ச் 28-ஆம் தேதி வரையில் இதுவரை 287 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 412-ஆக இருந்தது.

  போக்குவரத்து சமிக்ஞைகளை கடக்கும்போது, விதிமீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுவதைப் பார்த்து இதர வாகன ஓட்டிகள் தங்களை திருத்திக் கொள்கின்றனர்.

  மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, இரவு நேரத்தில் வேகமாக பயணிப்பது போன்ற சம்பவங்களைத் தடுக்க அதற்கான வாய்ப்புகள் உள்ள இடங்களில் போக்குவரத்து போலீஸார் அதிகளவில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

  கடந்த 2015-ஆம் ஆண்டு 582-ஆக இருந்த சாலை விபத்துகள் எண்ணிக்கை, கடந்த ஆண்டு (2016) 1,548-ஆக குறைந்துள்ளது என்று அந்த அதிகாரி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai