சுடச்சுட

  

  நல்லிணக்கத்தை ஊக்குவிக்க பசுவதைக்குத் தடை வேண்டும்: அஜ்மீர் தர்கா மதகுரு வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 05th April 2017 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மத நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக நாடு முழுவதும் பசு வதைக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்கா தலைமை மதகுரு ஜைனுல் அபேதின் அலி கான் வலியுறுத்தினார்.
  அஜ்மீர் தர்காவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள காஜா மொய்னுதீன் சிஷ்டியின் 805-ஆவது ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  இதில், நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு முஸ்லிம் தலைமை மதகுருக்கள் பங்கேற்றனர்.
  அப்போது, அஜ்மீர் தர்கா தலைமை மதகுரு அலி கான் கூறியதாவது: பசு உள்ளிட்ட கால்நடைகளை கொல்வதைத் தடுக்க தேவையான முயற்சிகளை முஸ்லிம்கள் முன்னெடுக்க வேண்டும். மாட்டிறைச்சி உண்பதையும் அவர்கள் தவிர்க்க வேண்டும். அப்போதுதான், நாட்டில் நேர்மறை செய்தி பரவும்.
  நானும், எனது குடும்பத்தினரும் மாட்டிறைச்சி உண்ண மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துவிட்டோம். பசுவை தேசிய விலங்காக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
  அப்போதுதான் அந்த விலங்கை காப்பாற்ற முடியும்.
  நாடு முழுவதும் மாட்டிறைச்சி விற்பனை செய்வதற்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்.
  குஜராத் மாநிலத்தில் பசுவதையில் ஈடுபடுவோருக்கு ஆயுள் சிறை விதிக்க அந்த மாநில அரசு சட்டம் இயற்றி உள்ளதை வரவேற்கிறேன். மூன்று முறை தலாக் என்று கூறி மனைவியை விவாகரத்து செய்யும் முறை முஸ்லிம் மதச் சட்டமான ஷரியத்தில் இல்லை. விவாகரத்து செய்வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட பெண்ணிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.
  சமூகத்தில் பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டிய மரியாதை குறித்து முஸ்லிம்களின் புனித நூலான குரானில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று அலி கான் தெரிவித்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai