சுடச்சுட

  

  பிகார் அமைச்சர் பதவியில் இருந்து லாலு மகனை நீக்க பாஜக வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 05th April 2017 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பிகார் மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சரும், ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத்தின் மகனுமான தேஜ் பிரதாபுக்கு 'மணல் கொள்முதல் ஊழலில்' தொடர்பிருப்பதாகவும், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தியுள்ளது.
  மேலும், இந்த ஊழல் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று முதல்வர் நீதிஷ் குமாரை அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
  இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி, பாட்னாவிலுள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
  பாட்னாவிலுள்ள சஞ்சய் காந்தி உயிரியல் பூங்காவை அழகுபடுத்துதல், சமதளப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக, ரூ.90 லட்சம் மதிப்புள்ள ஒப்பந்தம் வழங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளது. உரிய விதிமுறைகளை பின்பற்றாமல், ஒரு தனியார் நிறுவனத்துக்கு அந்த ஒப்பந்தத்தை சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. இந்த ஊழலில், தேஜ் பிரதாபுக்கு தொடர்புள்ளது. அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். இந்த ஊழல் குறித்த விசாரணைக்கு, முதல்வர் நிதீஷ் குமார் உத்தரவிட வேண்டும்.
  பிகாரில் அரசியல்வாதிகள் போலியான நிறுவனங்களைத் தொடங்கி, பொது மக்களின் பணத்தை தவறாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர் என்றார் சுஷில் குமார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai