சுடச்சுட

  

  பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் பாஸ்போர்ட் அமெரிக்காவில் திருட்டு

  By DIN  |   Published on : 05th April 2017 10:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  spb

   

  வாஷிங்டன்: பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் பாஸ்போர்ட், வங்கி கடன் அட்டை, பணம், பாடல் இசை குறிப்பு ஆகியவை அமெரிக்காவில் திருடு போனது.

  பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், அங்கு அவரது பை திருடு போனதாக கூறப்படுகிறது. அந்த பையில், அவரது பாஸ்போர்ட், வங்கி கடன் அட்டை, பணம், பாடல் இசை குறிப்பு ஆகியவை இருந்ததாக தெரிகிறது.

  பாஸ்போர்ட் திருடு போனது குறித்து எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தனது முகநூல் பதிவில் தெரிவித்திருப்பதாவது: தனது பையில்  வைத்திருந்த பாஸ்போர்ட் மட்டுமின்றி கிரடிட் கார்டுகள், பணம், ஐபேட், பாடல் இசை குறிப்பு ஆகியவை திருடு போனதாகவும் இதுகுறித்து உடனடியாக அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

  இதையடுத்து அவருக்கு உடனடியாக 24 மணி நேரத்தில் மாற்று பாஸ்போர்ட் நகல் வழங்கப்பட்டது. இதற்காக இந்திய தூதரகத்துக்கு தனது ‘முகநூல்’ பக்கத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நன்றி தெரிவித்துள்ளார்.  

  திருடு போன பொருட்களை தேடும் பணி நீடித்து வருகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai