சுடச்சுட

  

  போலி நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை: சென்னையைச் சேர்ந்தவர் உள்பட 2 பேரை கைது செய்தது அமலாக்கத் துறை

  By DIN  |   Published on : 05th April 2017 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாடு முழுவதும் போலி நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் அமலாக்கத் துறை, சென்னை, பெங்களூரு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 2 பேரை கைது செய்துள்ளது.
  இதுகுறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
  நாடு முழுவதும் செயல்பட்டு வரும் போலி நிறுவனங்கள் கருப்புப் பணம் உருவாக காரணமாக இருப்பதையடுத்து, அந்நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி அமலாக்கத் துறைக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் 16 மாநிலங்களில் செயல்பட்டு வந்த போலி நிறுவனங்களில் கடந்த 1-ஆம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
  இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த லியாகத் அலி, பெங்களூரைச் சேர்ந்த ஜி.டி. ரெட்டி ஆகிய 2 பேரை சட்டவிரோத பணப்பரிவர்த்தனைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை தற்போது கைது செய்துள்ளது. அதேபோல், பல்வேறு வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டிருந்த கருப்புப் பணம் ரூ.20 கோடியையும் அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
  கைது செய்யப்பட்ட 2 பேரில், பெங்களூரைச் சேர்ந்த ஜி.டி. ரெட்டி, பொறியியல் பட்டதாரி ஆவார். 20-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் உருவாவதற்கு மூளையாக இருந்துள்ளார். போலி ஆவணங்களை அளித்து வங்கியில் இருந்து ரூ.70 கோடி வரையிலும் கடன் பெற்று மோசடி செய்துள்ளார். அவருக்கு எதிரக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிறப்பு நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி, 2 நாள்கள் காவலில் எடுத்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
  சென்னையைச் சேர்ந்த லியாகத் அலி, போலி ஆவணங்களைக் கொண்டு போலி நிறுவனங்கள் ஆரம்பித்துள்ளார். பின்னர் அவற்றின்மூலம் அன்னியச் செலாவணி மோசடி செய்துள்ளார். அரசு வங்கியில் இவர் ரூ.78 கோடி கடன் வாங்கி மோசடி செய்துள்ளார். சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட லியாகத் அலி, புழல் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார் என்று அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai