சுடச்சுட

  

  மூன்றாண்டு கால பாஜக ஆட்சி: சாதனை விளக்க அறிக்கை வெளியிட மத்திய அரசு முடிவு

  By DIN  |   Published on : 05th April 2017 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சியின் மூன்றாண்டு கால ஆட்சி குறித்து சாதனை விளக்க அறிக்கை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் கூறிவரும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து அடுத்த மாதத்துடன் 3 ஆண்டுகள் நிறைவடைய இருக்கின்றன. இதையடுத்து, இந்த மூன்று ஆண்டுகளில் மத்திய அரசு செய்த சாதனைகளை விளக்கி விரிவான அறிக்கை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
  இதில், மத்திய அரசு அமல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் எந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன என்பது குறித்த புள்ளி விவரங்கள் இடம் பெறும். இதற்காக மத்திய அரசின் ஒவ்வொரு அமைச்சகமும், பல்வேறு தலைப்புகளில் துறைரீதியாக தங்களின் சாதனைகளின் பட்டியலைத் தயாரித்து அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
  மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள்; அவற்றின் பயன்கள், தூய்மை இந்தியா திட்டம், வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில்துறை முன்னேற்றம், கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகள், ஏழை மக்களுக்கான சிறப்புத் திட்டங்கள், மத்திய அரசுத் துறைகளில் லஞ்சம், ஊழல் இல்லாதது, நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, விவசாய மேம்பாட்டுத் திட்டங்கள், இளைஞர் திறன் மேம்பாடு, சிறுதொழில் ஊக்குவிப்பு நடவடிக்கைகள் போன்றவை மத்திய அரசின் சாதனை விளக்க அறிக்கையில் முக்கிய இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம், அடிப்படை துறைகளில் கவனம் செலுத்தி போதிய வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்பது மத்திய அரசின் மீது எதிர்க்கட்சிகளின் முக்கியக் குற்றச்சாட்டாக உள்ளது. பாஜக தலைûமையில் மத்திய அரசு அமைந்து வரும் மே 26-ஆம் தேதியுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றன.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai