சுடச்சுட

  

  யோகாசனத்தால் தெய்வீகத்தை உணர முடியாது: கிறிஸ்தவ பேராயர்

  By DIN  |   Published on : 05th April 2017 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  யோகாசனத்தால் தெய்வீகத்தன்மையை உணர முடியாது என்று கேரளத்தைச் சேர்ந்த சீரோ-மலபார் கத்தோலிக்க தேவாலயம் அறிவித்துள்ளது.
  சீரோ-மலபார் கிறிஸ்தவ ஆயர்கள், தாங்கள் பின்பற்றும் மதநம்பிக்கையுடன் யோகாசனத்தை ஒப்பிட்டு விவாதம் நடத்தினர். இறுதியாக சீரோ-மலபார் கத்தோலிக்க தேவாலய பேராயர் கார்டினல் ஜார்ஜ் ஆலென்செர்ரி இது தொடர்பாக தங்கள் தேவாலய பாதிரியார்களுக்கு ஒரு சுற்றிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: நாம் தனிப்பட்ட ஒரு கடவுளை நம்புகிறோம். உடல்ரீதியாக ஒரு சில செயல்முறைகளைத் தொடர்ந்து செய்வதால் நமது கடவுளை அடைய முடியாது.
  இந்திய கலாசாரத்தில் யோகாசனத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். யோகாசனத்தை ஓர் உடற்பயிற்சியாகவும், தியானத்தை மனதை ஒருமுகப்படுத்தும் வழிமுறையாகவும் வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம்.
  அதே நேரத்தில் தியானம், யோகாசனம் ஆகியவற்றால் தெய்வீகத்தன்மையை உணர முடியாது. எனவே, தேவாலயங்களில் அதிகாரப்பூர்வமாக யோகாசனம் உள்ளிட்டவை கற்றுக் கொடுக்கப்படக் கூடாது. ஏனெனில், அது கத்தோலிக்க மத நம்பிக்கைகளுக்கு எதிரானது. நமது பிரார்த்தனைகளின்போது இதுபோன்ற செயல்களில் (யோகாசனத்தில் அமர்வது) ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai