சுடச்சுட

  

  ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தில்லிக்கு புறப்பட்ட ராணுவ வீரரின் பையில் தோட்டா இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
  ராணுவத்தில் பணியாற்றும் பாண்டியராஜ் என்ற வீரர், விடுப்பில் தில்லி செல்வதற்காக ஸ்ரீநகரில் இருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட்டார். அவரது உடைமைகளை விமான நிலையத்தில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பாண்டியராஜின் பையில்
  தோட்டா ஒன்று இருந்தது. இதையடுத்து, அவர் மேல் விசாரணைக்காக ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
  இது குறித்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், 'அவரது பையில் தவறுதலாக தோட்டா இருந்திருக்கும் என்று தோன்றுகிறது' என்று தெரிவித்தனர்.
  கையெறி குண்டுடன் பிடிபட்ட வீரருக்கு ஜாமீன்: இதனிடையே, ஸ்ரீநகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் 2 கையெறி குண்டுகளுடன் பிடிபட்ட மற்றொரு ராணுவ வீரருக்கு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. அது குறித்த விவரம் வருமாறு:
  போபால் முகியா என்ற ராணுவ வீரர் தில்லி செல்வதற்காக திங்கள்கிழமை ஸ்ரீநகர் விமான நிலையத்துக்கு வந்தார். அவரது உடைமைகளை சோதனை செய்தபோது 2 கையெறி குண்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது. அதையடுத்து, அவரை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர்.
  ஸ்ரீநகர் மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவர் ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
  அவரிடம் விசாரணை நடத்தியபோது தனது மேல் அதிகாரி ஒருவர் தில்லி விமான நிலையத்தில் ஒரு நபரிடம் ஒப்படைக்கக் கோரி 2 கையெறி குண்டுகளை அளித்ததாக முகியா தெரிவித்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai