சுடச்சுட

  
  Pranab

  ராம நவமி தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  'அற்புதமான தெய்வீகம் நிறைந்த ராம நவமி தினத்தை கொண்டாட உள்ள நாட்டு மக்களுக்கு இதயம்கனிந்த வாழ்த்துகள்' என்று சுட்டுரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
  ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளிலும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  ராமர் பிறந்த தினம் ராம நவமி என்றழைக்கப்படுகிறது.
  குடியரசுத் தலைவர் வாழ்த்து: இதனிடையே, ராம நவமியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  இதுதொடர்பாக, சுட்டுரையில் அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:
  ராம நவமியை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து குடிமக்களுக்கும், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நன்னாளில் நாடு வளமும், வளர்ச்சியும் அடைவதற்கு அனைவரும் தங்களை மறுஅர்ப்பணிப்பு செய்ய வேண்டுகிறேன்.
  சிறந்த குணங்கள், உயர்ந்த பண்புகளின் ஒப்பற்ற வடிவமாகத் திகழ்ந்தவர் ராமபிரான். அவரை உதாரணமாகக் கொண்டு, நல்லறத்தை நோக்கிய பாதையில் நாம் பயணிக்க வேண்டும். இந்த விழாவானது அனைத்துத் தரப்பு மக்களையும் உணர்வுபூர்வமாகவும், மனப்பூர்வமாகவும் ஒன்றுபடுவதற்கு உதவட்டும் என்று அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் தெரிவித்துள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai