சுடச்சுட

  

  வாட்ஸ்-அப் தகவல் பகிர்வு வழக்கு: அரசியலமைப்பு சட்ட அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு!

  By PTI  |   Published on : 05th April 2017 02:58 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  whatsapp

   

  புதுதில்லி: பயனாளர்களின் அந்தரங்க தகவல்களை தனது மூல நிறுவனமான முகநூலுடன் செய்தி பரிமாற்ற செயலி நிறுவனமான வாட்ஸ்-அப் பகிர்ந்து கொள்வது தொடர்பான வழக்கை, அரசியலமைப்பு சட்ட அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

  பிரபல செய்திப்பரிமற்ற செயலியான வாட்சப் தனது பயனாளர்களின் அந்தரங்க நடைமுறைகளில்  மாற்றம் கொண்டு வந்தது. அதனபடி பயனாளர்களின் அலைபேசி எண் உள்ளிட்ட அந்தரங்க தகவல்களை தனது மூல நிறுவனமான முகநூலுடன் பகிர்ந்து கொள்வது என்று முடிவு எடுத்தது. அதன்படி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், பயனாளர்கள் சேவையில் இருந்து விலகி கொள்ள செப்டம்பர் 25-ஆம் தேதி வரை அவகாசம் கொடுத்திருந்தது. அதன் பிறகு சேவையை பயன்படுத்துவோரின் தகவல்கள் வியாபார நோக்கங்களுக்காக முக நூலோடு  பகிரப்படும் என்றும் அறிவித்தது.

  இதனை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல  வழக்கு ஒன்றை வழக்கறிஞர் ஷர்மா என்பவர் தொடுத்தார். இந்த வழக்கில் முதலாவது டிவிஷன் பெஞ்சு அளித்த தீர்ப்பில் வாட்ஸ் -அப் நிறுவனம், செப்டம்பர் 25, 2016க்கு முனதாக வாட்ஸ்-அப் சேவையிலிருந்து நீங்கியவர்களின் தகவல்களை அழித்து விட வேண்டுமென்று தீர்ப்பு வழங்கியது. 

  மேலும் வாட்ஸ்-அப்ப உள்ளிட்ட செய்திப் பரிமாற்ற செயலி சேவைகளை வரையறுக்கப்பட்ட முழுமையான சட்ட திட்டங்களுக்குள்கொண்டு வர இயலுமா என்பது குறித்து கருத்து தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கும்,மத்திய தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையதிற்கும்  (ட்ராய்)  உத்தரவிட்டிருந்தது. 

  இந்நிலையில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் மற்றும் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வானது இந்த  வழக்கை கூடுதல்  நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமரவும் மாற்றி   உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணை வரும் ஏப்ரல் 18-ஆம் தேதியன்று நடைபெறும் எனவும், அன்று அமர்வின் முன்பு ஆஜராகுமாறு சம்பந்தப்பட்ட கட்சி க ளுக்கும் தெரிவித்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai