சுடச்சுட

  

  ஹெச்1பி விசா முறையை அமெரிக்க நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது: டிரம்ப் நிர்வாகம்

  By DIN  |   Published on : 05th April 2017 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான ஹெச்1பி நுழைவு இசைவு (விசா) நடைமுறையை, அமெரிக்கப் பணியாளர்களுக்கு எதிராக அந்த நாட்டு நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
  வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவில் தங்கி பணிபுரிவதற்காக 'ஹெச்1பி' விசாக்கள் வழங்கப்படுகின்றன. இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையினருக்கு இந்த விசா நடைமுறை வரப்பிரசாதமாக இருந்து வந்தது.
  இந்த நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவியேற்றதைத் தொடர்ந்து, உள்நாட்டுப் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் ஹெச்1பி விசா வழங்குவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  இந்தச் சூழலில், அமெரிக்க நீதித் துறையின் சிவில் உரிமைப் பிரிவுக்கான தாற்காலிக துணை அட்டர்னி ஜெனரல் டாம் வீலர் தெரிவித்ததாவது: வெளிநாட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்காக வழங்கப்படும் ஹெச்1பி விசா முறையை, அமெரிக்க நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்துவதை நீதித் துறை ஒருபோதும் அனுமதிக்காது. அந்த விசா முறையைப் பயன்படுத்தி, அமெரிக்கப் பணியாளர்களை நிறுவனங்கள் புறக்கணிக்கக் கூடாது என்று அவர் எச்சரித்தார்.
  அடுத்த நிதியாண்டுக்கான ஹெச்1பி விசா விண்ணப்பங்களை அமெரிக்க நிறுவனங்கள் வரும் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதியிலிருந்து வரவேற்கவிருக்கும் நிலையில், நீதித் துறை இவ்வாறு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai