சுடச்சுட

  

  ராஜஸ்தானில் பசுக்களைக் கடத்தியதாகக் கூறி பசுப் பாதுகாவலர்களால் தாக்கப்பட்ட நபர் புதன்கிழமை உயிரிழந்தார்.
  ராஜஸ்தான் மாநிலம், அல்வர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பெஹ்லு கான் (55). இவர் கடந்த சனிக்கிழமை 6 பசு மாடுகளை ஹரியாணாவுக்கு வேனில் கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது.
  இதுகுறித்து தகவலறிந்த பசுப் பாதுகாவலர்கள், அங்கு வந்து பெஹ்லு கான் உள்ளிட்ட மூன்று பேரை கடுமையாக தாக்கினர். இதில் அந்த மூன்று பேரும் படுகாயமடைந்தனர். இதில், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனில்லாமல் பெஹ்லு கான் புதன்கிழமை உயிரிழந்தார்.
  இச்சம்பவம் குறித்து அல்வர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், இந்த வழக்கு தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai