சுடச்சுட

  

  ஆப்பிரிக்க மாணவர்கள் மீதான தாக்குதல் இனவெறியா? சுஷ்மா வேதனை

  By DIN  |   Published on : 06th April 2017 03:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  susma

  தங்கள் நாட்டு மாணவர்கள் மீதான தாக்குதல் இனவெறித் தாக்குதல் என்று ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த தூதரகங்கள் குற்றம்சாட்டியுள்ளது வியப்பையும், வேதனையையும் அளிப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
  இதுதொடர்பாக மக்களவையில் அவர் புதன்கிழமை மேலும் கூறியதாவது: இனவெறித் தாக்குதல் என்பது திட்டமிட்டு நடத்தப்படுவதாகும். உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் அண்மையில் ஆப்பிரிக்க மாணவர்களுக்கு எதிராக ஒரு மர்ம கும்பல் நடத்திய தாக்குதல் திட்டமிடப்பட்டது அல்ல. அயல்நாட்டு மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. கிரேட்டர் நொய்டாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிராக அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து ஆப்பிரிக்கத் தூதரகங்களிடம் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே. சிங் விளக்கம் அளித்துள்ளார்.
  தாக்குதல் சம்பவம் தொடர்பாக உத்தரப் பிரதேச மாநில போலீஸôர் இதுவரை 6 பேரை கைது செய்துள்ளனர்.
  ஆப்பிரிக்க மாணவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் துரதிருஷ்டவசமானது. அத்தகைய தாக்குதலுக்கு எதிராக மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று அந்நாட்டுத் தூதரகங்கள் குற்றம்சாட்டுவதை எந்தச் சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த விவகாரத்தை பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக கவனத்தில் எடுத்துக் கொண்டு கண்காணித்து வருகிறார் என்றார் சுஷ்மா ஸ்வராஜ்.
  முன்னதாக, ராஜீய ரீதியிலான உறவு தோல்வி அடைந்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் கே.சி.வேணுகோபால் மக்களவையில் குற்றம்சாட்டியதை அடுத்து சுஷ்மா ஸ்வராஜ் இந்த விளக்கத்தை அளித்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai