சுடச்சுட

  

  உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர் சிவபால் யாதவ் புதன்கிழமை சந்தித்தார்.
  உத்தரப் பிரதேசத்தில் அண்மையில் நடந்துமுடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் சமாஜவாதியின் கோட்டையாக கருதப்படும் ஜஸ்வந்த்நகரில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவர் சிவபால் யாதவ்.
  அவருக்கும், சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவுக்கும் இடையே இருந்த கருத்து மோதல் காரணமாக உள்கட்சி பூசல் நிலவியது. தேர்தலில் சமாஜவாதி தோல்வி அடைய இவர்களின் குடும்பப் பிரச்னையும் ஒரு காரணம் என்று கருதப்படுகிறது.
  இந்தச் சூழ்நிலையில் சமாஜவாதியின் நிறுவனரான முலாயம் சிங் யாதவின் மருமகள் அபர்ணா யாதவ், முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சில தினங்களுக்கு முன்பு மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
  இந்நிலையில், அவரை சிவபால் சிங் யாதவ் புதன்கிழமை சந்தித்து 15 நிமிடங்கள் வரை உரையாடினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai