சுடச்சுட

  

  என்ஜிஓ-க்களுக்கான கட்டுப்பாடுகள் கடுமையாகிறது: உச்ச நீதிமன்றத்தில் புதிய நெறிமுறைகள் தாக்கல்

  By DIN  |   Published on : 06th April 2017 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (என்ஜிஓ) தங்களுக்கு கிடைக்கும் நிதியை பயன்படுத்துவது தொடர்பாக கடும் கட்டுப்பாடுகள் அடங்கிய நெறிமுறைகளை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு புதன்கிழமை தாக்கல் செய்தது.
  நாடு முழுவதும் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை முறைப்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
  நாடு முழுவதும் இயங்கி வரும் 32 லட்சத்துக்கும் அதிகமான தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தங்களுக்கு கிடைக்கும் நிதியை முறைகேடாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவதாகவும், எனவே, தொண்டு நிறுவனங்களை முறைப்படுத்த வேண்டும் எனவும் அந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்தன.
  இந்த மனுக்களை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம், நாடு முழுவதும் இயங்கி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை முறைப்படுத்தும் வகையில் நெறிமுறைகளை வகுக்குமாறு மத்திய அரசுக்கு கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டது.
  அதன்படி, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை முறைப்படுத்தும் நெறிமுறைகளை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு புதன்கிழமை தாக்கல் செய்தது. அந்த நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டிருக்கும் முக்கிய அம்சங்களாவன:
  தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தங்களுக்கு வழங்கப்படும் நிதிக்கான மதிப்பில் குடியரசுத் தலைவர் பெயரில் உறுதிமொழி பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். ஒவ்வொரு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் நிர்வாகக் குழு மூலமாக இந்த உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
  இந்த உறுதிமொழிப் பத்திரத்தில் உள்ள விதிகள் மீறப்படும்பட்சத்தில், குறிப்பிட்ட தொண்டு நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட நிதியை 10 சதவீத வட்டியுடன் திருப்பி அளிக்க வேண்டும்.
  தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகள் ஆண்டுதோறும் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் (சிஏஜி) ஆய்வுக்கு உள்படுத்தப்படும். இந்த ஆய்வறிக்கையில் தொண்டு நிறுவனங்கள் ஏதேனும் நிதி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தால், அந்தத் தொண்டு நிறுவனங்களுக்கு தடை விதிப்பது உள்ளிட்ட பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைக் கண்காணிக்கும் அமைப்பாக நீதி ஆயோக் அமைப்பு செயல்படும் என்பன உள்ளிட்ட நெறிமுறை
  கள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai