சுடச்சுட

  

  சீனாவுக்கு எதிராக என்னை இந்தியா பயன்படுத்தியது கிடையாது

  By DIN  |   Published on : 06th April 2017 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Dalailama1

  சீனாவுக்கு எதிராக தன்னை ஒருபோதும் இந்தியா பயன்படுத்தியது கிடையாது என்று திபெத்திய பௌத்த மதத் தலைவர் தலாய் லாமா தெரிவித்தார்.
  இந்தியாவுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ள தலாய் லாமா, அருணாசலப் பிரதேசத்துக்கு புதன்கிழமை வருகை தந்தார். அருணாசலப் பிரதேசத்தை தனது நாட்டின் ஒரு பகுதி என சொந்தம் கொண்டாடி வரும் சீனா, அந்த மாநிலத்துக்கு தலாய் லாமா செல்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எனினும், சீனாவின் எதிர்ப்பை புறந்தள்ளிய இந்தியா, அருணாசலப் பிரதேசத்துக்கு தலாய் லாமா வருவதற்கு அனுமதி அளித்தது.
  இதனைத் தொடர்ந்து, அருணாசலப் பிரதேசத்துக்கு வருகை தந்த தலாய் லாமாவை அம்மாநில முதல்வர் பெமா காண்டு மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.
  அப்போது அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தலாய் லாமா பேசியதாவது:
  உலக அளவில் எனது மனதுக்கு நெருக்கமான இடமாக ஒன்று இருக்குமேயானால், அது அருணாசலப் பிரதேசமாகதான் இருக்க முடியும். எனக்கு விடுதலை கிடைத்ததும், அருணாசலப் பிரதேச மாநிலம் மூலமாகவே இந்தியா வந்தடைந்தேன். எனவே, எனக்கு இந்த மாநிலத்துடன் உணர்வு ரீதியிôன பிணைப்பு அதிகம்.
  இந்தியாவின் நீண்டகால விருந்தாளியாக நான் இருக்கிறேன். ஏறத்தாழ 1959-ஆம் ஆண்டு முதல் இந்தியா என்னை சிறப்பாக கவனித்து வந்துள்ளது. அதற்காக, இந்திய அரசுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.
  நான் அருணாசலப் பிரதேசம் வருவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பண்டைய இந்தியர்களின் சிந்தனைகளை உலகம் முழுவதும் பரப்பும் தூதுவனாக நான் இருக்கிறேன். அஹிம்சை, கொல்லாமை ஆகியவையே எனது கொள்கைகள். இவ்வாறு அமைதி வழியில் சென்றுக் கொண்டிருக்கும் என்னை, சீனாவில் உள்ள குறுகிய மனப்பான்மைக் கொண்ட அரசியல்வாதிகள் சிலர் ஒரு அரக்கனைப் போல கருதுகிறார்கள். மேலும், இந்தியாவுடன் சேர்ந்து சீனாவுக்கு எதிராக சதிச்செயலில் நான் ஈடுபடுவதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதனை ஒரு வேடிக்கையான குற்றச்சாட்டாகவே நான் பார்க்கிறேன்.
  உண்மையில், சீனாவுக்கு எதிராக ஒருபோதும் இந்தியா என்னைப் பயன்படுத்தியது கிடையாது.
  நாங்களும் (திபெத்தியர்கள்) சீனாவை எதிர்க்கவில்லை. சீனாவிலிருந்து திபெத்துக்கு விடுதலையும் கேட்கவில்லை. சீனாவில் இருக்கவே நாங்கள் விரும்புகிறோம். அதேசமயத்தில், திபெத்துக்கு தன்னாட்சி அதிகாரம் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்களின் நியாயமான கோரிக்கையை சீனா ஏற்க வேண்டும் என்றார் தலாய் லாமா.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai