சுடச்சுட

  

  தலாக் விவாகரத்து முறையை தடை செய்ய ஷியா முஸ்லிம் அமைப்பு வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 06th April 2017 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முஸ்லிம்களின் தலாக் விவாகரத்து முறையைத் தடைசெய்ய வேண்டுமென்று அகில இந்திய ஷியா முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வலியுறுத்தியுள்ளது.
  லக்னெளவில் அகில இந்திய ஷியா முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், தலாக் விவாகரத்து முறைக்கு தடை விதிக்க வேண்டும், இந்தியாவில் பசுவதைக்கு ஃபத்வா (மதரீதியிலான தடை) விதிப்பது, அயோத்தி ராமர் கோயில் விவகாரத்துக்கு நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வுகாண வேண்
  டும் என மூன்று முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயம் குறித்து அகில இந்திய ஷியா முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் உறுப்பினர் மெளலானா யாசூப் அப்பாஸ் கூறியதாவது:
  எந்த இடத்தில் மதரீதியிலான பிரச்னைகள் விவாதிக்கப்பட்டாலும், அதில் அரசியல் கட்சிகள் தலையிடக் கூடாது. அரசியல் தலையீடு இல்லாமல், பேச்சுவார்த்தை நடத்தப்பட்டால் ஒருதரப்பினர் மற்றொரு தரப்பினரின் ஆதங்கத்தைப் புரிந்து கொள்ள முடியும். இதன் மூலம் பிரச்னைக்கு சுமுக தீர்வுகாணலாம். அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இதைத்தான் வலியுறுத்தியுள்ளது. பசுவதை என்பது இந்தியாவில் மதரீதியில் பிரச்னையை ஏற்படுத்துவதாக உள்ளது என்றார்.
  மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து அளிப்பது இஸ்லாமுக்கு விரோதமானது என்றும், குரானில் கூறப்பட்டுள்ளவற்றுக்கு மாறானது என்றும் ஈரானில் உள்ள ஷியா முஸ்லிம் மதகுருவான அயத்துல்லா ஷேக் பஷீர் ஹுசைன் நஜீப், அஜ்மீர் தர்காவின் திவான் ஆகியோர் சில நாள்களுக்கு முன்பு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai