சுடச்சுட

  

  தொழிலாளர் இழப்பீட்டு சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்

  By DIN  |   Published on : 06th April 2017 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பணியிடங்களில் நேரிடும் விபத்துகளில் காயமடையும் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் புதன்கிழமை நிறைவேறியது.
  விபத்துகள் நேரும் வண்ணம் அலட்சியமாகச் செயல்படும் தொழில் நிறுவனங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கும் அம்சமும் அதில் இடம்பெற்றுள்ளது.
  தொழிலாளர் இழப்பீட்டு சட்டத் திருத்த மசோதா (2016) கடந்த ஆண்டு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், அந்த மசோதாவை மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, மாநிலங்களவையில் அண்மையில் தாக்கல் செய்தார்.
  பணியிடங்களில் நேரிடும் விபத்துகளில் ஊழியர்கள் எவரேனும் காயமடைந்தால், தற்போது ரூ.50,000 இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. அதனை ரூ.1 லட்சமாக உயர்த்த இந்தச் சட்டத் திருத்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி பணிச் சூழல்களால் ஏற்படும் நோய்களுக்கும் இழப்பீடு வழங்கவும் அதில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இத்தகைய விபத்துகளுக்கு பாதுகாப்பு அலட்சியங்களே காரணம் என்பது நிரூபணமானால் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனத்துக்கு அதிகப்படியான அபராதம் விதிக்கவும் இந்தச் சட்டத் திருத்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
  இநிலையில், அந்த மசோதாவில் 2 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மாநிலங்களவையில் அது அண்மையில் நிறைவேற்றப்பட்டது. அந்தத் திருத்தங்கள் மக்களவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டன. அதன் மீதான விவாதம், புதன்கிழமை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இத்திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai