சுடச்சுட

  

  நாட்டில் நகர்ப்புற வறுமை ஒழிப்பில் தமிழகம் முதலிடம்: மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தகவல்!

  By DIN  |   Published on : 06th April 2017 07:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  venkaiaya_nayudu

   

  புதுதில்லி: நாட்டிலேயே நகர்ப்புற வறுமை ஒழிப்பில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு மாநிலங்களவையில் தகவல் தெரிவித்துள்ளார்.

  மாநிலங்களவையில் நகர்ப்புற வறுமை ஒழிப்பு திட்டங்கள் செயல்பாடு தொடர்பாக உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்து மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்ததாவது: 

  நாட்டிலேயே நகர்ப்புற வறுமை ஒழிப்புத்த திட்டங்களை செய்லபடுத்தி தமிழகம் முதலிடம் வகிக்கிறது.மேலும் தமிழகத்தில் நாட்டிலேயே இல்லாத அளவாக 24,245 மகளிர் சுய உதவிக்குழுக்கள் செய்லபடுகின்றன. அத்துடன் 30,258 பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய கடன்களும் வழங்கப்பட்டிருக்கின்றன.

  இவ்வாறு அவர் தனது பதிலில் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai