சுடச்சுட

  

  பனிப்பொழிவு: ஸ்ரீநகரில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஏப்ரல் 10-ஆம் தேதி வரை விடுமுறை 

  By ஜம்மு  |   Published on : 06th April 2017 12:30 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  lorrys

  பனிப்பொழிவு காரமணாக ஸ்ரீநகரில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஏப்ரல் 10-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

  ஜம்மு - காஷ்மீரில், கடந்த சில நாள்களாக பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. வீடுகள், பூங்காக்கள் பேருந்து நிலையங்கள் என அனைத்து இடங்களிலும் பனி உறைந்துள்ளதால் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. கடும் பனிப்பொழிவு மற்றும் நிலச்சரிவு காரணமாக ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை தொடர்ந்து இன்று 2-வது நாளாக மூடப்பட்டுள்ளது. இதனால், நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆங்காங்கே சாலைகளில் நிறுத்தப்பட்டன.

  மேலும் ஸ்ரீநகர், பாராமுல்லா பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஏப்ரல் 10-ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மிரில் நிலவும் கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai