சுடச்சுட

  

  பாகிஸ்தான் படைகள் மீண்டும் அத்துமீறல்: இந்தியா பதிலடி

  By DIN  |   Published on : 06th April 2017 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி அமைந்துள்ள இந்திய ராணுவ முகாம்களை குறிவைத்து, பாகிஸ்தான் படையினர் புதன்கிழமை தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, இந்திய தரப்பில் இருந்து தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.
  எல்லையில் கடந்த 48 மணி நேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் படையினர் 4-ஆவது முறையாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
  இதுதொடர்பாக பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:
  பூஞ்ச் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டையொட்டி அமைந்துள்ள இந்திய ராணுவ முகாம்களை குறிவைத்து, புதன்கிழமை காலை 9 மணியளவில் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தினர். சிறிய ரக பீரங்கிகள், தானியங்கி துப்பாக்கிகள் மூலம் நடத்தப்பட்ட இத்தாக்குதலுக்கு, இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர் என்றார்.
  இருதரப்புக்கும் இடையே தாக்குதல் நீடித்து வருவதாக, கடைசியாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
  முன்னதாக ரஜௌரி மாவட்டம், பிம்பெர் காலி பகுதியில் பாகிஸ்தான் படையினர் செவ்வாய்க்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதே மாவட்டத்தின் பாலாகோட் பகுதியிலும், பூஞ்ச் மாவட்டம், திக்வார் பகுதியிலும் கடந்த 3-ஆம் தேதி பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai