சுடச்சுட

  

  மத்தியப் பிரதேச மாநிலம், சேவ்தா தாலுகாவில் வீடு ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு உருளைகள் வெடித்து சிதறிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
  சேவ்தா தாலுகா, மதன் கா பெஹரா பகுதியில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. இதில் அந்த வீட்டில் இருந்த ரஷித், அவரது மனைவி ரூபி, சகோதரி ரஸியா, அவரது 2 குழந்தைகள், உறவினர் சஜாலி ஆகிய 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
  ரஸியாவின் திருமணம் விரைவில் நடைபெற இருந்தது. இந்த திருமணத்தின்போது சமையலுக்கு பயன்படுத்த எரிவாயு உருளைகள் உள்ளிட்டவற்றை வாங்கி வீட்டில் ரஷித் இருப்பு வைத்துள்ளார். இந்நிலையில், எரிவாயு உருளைகள் திடீரென வெடித்துள்ளன. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai