சுடச்சுட

  

  ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டமில்லை: மத்திய அரசு

  By DIN  |   Published on : 06th April 2017 02:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  2000

  புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரூ.2,000 நோட்டுகளைத் திரும்பப்பெறும் திட்டமில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.
  புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டுகளை மத்திய அரசு திரும்பப் பெற இருப்பதாக வதந்திகள் பரவி வருவதால், அவ்வாறு திரும்பப் பெறும் திட்டம் அரசுக்கு உள்ளதா? என்று மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் மதுசூதன் மிஸ்திரி கேள்வியெழுப்பினார்.
  அவருக்குப் பதிலளிக்கும் வகையில் மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது:
  ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறுவது குறித்து பரவும் வதந்திகளுக்கு விளக்கம் தர இயலாது. மேலும், கள்ள ரூபாய் நோட்டுகளைத் தடுப்பதற்கு மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
  ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு குஜராத், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ரூ.2,000 கள்ள நோட்டுகள் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
  புதிய ரூபாய் நோட்டுகள், கூடுதல் சிறப்பம்சங்களுடன் தயாரிக்கப்படுவதால், அவற்றைப் போலவே கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க இயலாது. எனவே, கள்ள ரூபாய் நோட்டுகளைக் கண்டுபிடித்து விட முடியும் என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai