சுடச்சுட

  

  லாலு மகனுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க அனைத்துக் கட்சி குழு: பாஜக வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 06th April 2017 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பிகார் அமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாதின் மகனுமான தேஜ் பிரதாப் யாதவுக்கு எதிரான மணல் கொள்முதல் ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க அனைத்துக் கட்சி விசாரணைக் குழுவை முதல்வர் நிதீஷ் குமார் ஏற்படுத்த வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
  பிகாரில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளக் கட்சியும், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளமும் கூட்டணி அரசு அமைத்துள்ளன. லாலுவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் அந்த மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக உள்ளார்.
  இந்நிலையில், பிகார் மாநில பாஜக மூத்த தலைவர் சுஷில்குமார் மோடி செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசியபோது, பாட்னாவில் உள்ள உயிரியல் பூங்காவில் பராமரிப்பு பணிக்காக மணல் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக தெரிவித்தார். பாட்னா பூங்காவுக்கு ஒப்பந்தப் புள்ளி கோராமல் ரூ.70 லட்சம் மதிப்புள்ள மணல் கொள்முதலுக்கு தேஜ் பிரதாப் யாதவ் உத்தரவிட்டதாக குற்றம்சாட்டினார்.
  இந்த குற்றச்சாட்டை தேஜ் பிரதாப் யாதவ் மறுத்தார். லாலு பிரசாத் யாதவ் கூறியபோது எந்த விசாரணைக்கும் தமது குடும்பம் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
  இந்நிலையில், சுஷில் குமார் மோடி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், 'எந்த அமைப்பின் விசாரணைக்கும் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் தயாராக இருக்கிறார் எனில், காலதாமதமின்றி அனைத்துக் கட்சி விசாரணைக் குழுவை முதல்வர் நிதீஷ்குமார் அமைக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai