சுடச்சுட

  
  rahul

  விவசாயிகளுக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டக் கூடாது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
  உத்தரப் பிரதேசத்தில் ரூ.36,359 கோடி விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதன் மூலம் அந்த மாநில விவசாயிகளுக்கு ஓரளவு நிவாரணம் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
  இதுதொடர்பாக சமூக வலைதளமான சுட்டுரையில் அவர் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதை வரவேற்கிறேன். விவசாயிகள் துன்பத்தில் இருக்கும்போது அவர்களின் கடன்களை ரத்து செய்வதை காங்கிரஸ் எப்போதும் ஆதரிக்கும். ஆனால், மற்ற மாநிலங்களில் விவசாயிகள் படும் துன்பத்தையும் மத்திய அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். பாஜக ஆட்சி நடைபெறாத மாநில விவசாயிகளுக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டக் கூடாது. நாடு முழுவதும் விவசாயிகள் படும் வேதனையில் மத்திய அரசு அரசியல் செய்ய வேண்டாம். அனைத்து விவசாயிகளின் கடன்களையும் ரத்து செய்து அவர்களிடன் துயரங்களைப் போக்க வேண்டும் என்று அந்தப் பதிவில் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai