சுடச்சுட

    

    5 லட்சம் டன் வரையிலான சர்க்கரை வரியின்றி இறக்குமதி: மத்திய அரசு அனுமதி

    By DIN  |   Published on : 06th April 2017 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வெளிநாடுகளில் இருந்து 5 லட்சம் டன் வரையிலான சுத்திகரிக்கப்படாத சர்க்கரை, வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    உள்நாட்டில் சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்துவதுடன், விநியோகத்தையும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    இதுதொடர்பாக, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு புதன்கிழமை தாக்கல் செய்த ஓர் அறிக்கையில், '5 லட்சம் டன் வரையிலான சுத்திகரிக்கப்படாத சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்வதற்கு, வரும் ஜூன் மாதம் 12-ஆம் தேதி வரை அனுமதிக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    நாட்டில் சர்க்கரை உற்பத்தி, 2015-16ஆம் நிதியாண்டில் 2.5 கோடி டன்களாக இருந்தது. ஆனால், வறட்சி காரணமாக 2016-17ஆம் நிதியாண்டில் சர்க்கரை உற்பத்தி 2.2 கோடி டன்களாக குறைந்துள்ளதாக மத்திய அரசு கணக்கிட்டுள்ளது.
    உலக அளவில் சர்க்கரை உற்பத்தியில் 2-ஆவது இடத்திலும், நுகர்வில் முதலிடத்திலும் இருக்கும் இந்தியாவில், ஓர் ஆண்டுக்கு சராசரியாக 2.5 கோடி டன் சர்க்கரை தேவை உள்ளது. ஆனால், கடந்த நிதியாண்டில் சர்க்கரை உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai