சுடச்சுட

  

  அதிகாரிகளால் ஆர்டிஐ விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவது அதிகரிப்பு: மத்திய அரசு

  By DIN  |   Published on : 07th April 2017 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடந்த 2013-14-ஆம் ஆண்டைக் காட்டிலும் 2015-16-ஆம் ஆண்டில் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்ட தகவல் அறியும் (ஆர்டிஐ) விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  இதுதொடர்பாக மாநிலங்களவையில் வியாழக்கிழமை பொதுமக்கள் குறைதீர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதில்: கடந்த 2013-14-ஆம் ஆண்டில் 60,127 ஆர்டிஐ விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. அதற்கு அடுத்த நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 63,551-ஆனது. இதே எண்ணிக்கை கடந்த நிதியாண்டில் (2015-16) 64,666-ஆக உயர்ந்தது. இதே காலகட்டத்தில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு வந்த ஆர்டிஐ விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் 9.77 லட்சம் ஆர்டிஐ விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்று அந்த பதிலில் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
  இதனிடையே, 'பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம்' என்ற திட்டத்தின் பலன்களைப் பெறுவதற்கு பல்வேறு மாநிலங்களில் போலி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai