சுடச்சுட

  

  'ஆம்பி வேலி' சொத்துகள் ஏலம் விடப்படும்! சஹாரா குழுமத்துக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

  By DIN  |   Published on : 07th April 2017 02:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  supreme_court

  முதலீட்டாளர்களுக்குச் சேர வேண்டிய தவணைத் தொகை ரூ.5,092 கோடியை சஹாரா குழுமம் செலுத்தத் தவறினால் புணேவில் அக்குழுமத்துக்குச் சொந்தமாக உள்ள 'ஆம்பி வேலி' சொத்துகள் ஏலம் விடப்படும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
  முதலீட்டாளர்களின் ரூ.24,000 கோடி நிதியை மோசடி செய்த விவகாரத்தில் சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 18 மாதங்களுக்குள் ரூ.36,000 கோடியை இந்திய பங்குப் பரிவர்த்தனை வாரியம் (செபி) அமைப்பிடம் சுப்ரதா ராய் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அதனை 9 தவணைகளாகச் செலுத்த அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
  மேலும், இந்திய பங்குப் பரிவர்த்தனை வாரியம் (செபி) வசம் உள்ள சஹாரா குழுமத்தின் சொத்துகளை விற்பனை செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்நிலையில் தவணைத் தொகையான ரூ.5,092 கோடியை செபியின் கணக்கில் வரும் 18-ஆம் தேதிக்குள் டெபாசிட் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
  ஆனால், அந்த அவகாசத்தை நீட்டிக்கக் கோரி சஹாரா குழுமம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு, நீதிபதி தீபக் மிஸ்ரா முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது:
  குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் தவணைத் தொகையை சஹாரா குழுமம் செலுத்தியே ஆக வேண்டும். அவகாசத்தை நீட்டிக்க இயலாது. ஒருவேளை வரும் 18-ஆம் தேதிக்குள் தவணைத் தொகையைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் புணேவில் உள்ள 'ஆம்பி வேலி' சொத்துகள் ஏலமிடப்படும் என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai